புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2019

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது மதிமுக


இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெறவுள்ள 17வது பொதுத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் கட்சிகளை தொடர்ந்து மதிமுகவும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதியில் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள அ. கணேசமூர்த்தி வைகோவின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார். மக்களவை தேர்தலுக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை தொடங்கிய போது, மதிமுக-வுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒரு மாநிலங்களவை இடமும் அடங்கும்.

அதன்படி, திமுக-விடம் மாநிலங்களவையில் தனக்கும், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு கணேசமூர்த்திக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சீட் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முன்னதாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தனர். தற்போது மதிமுக-வும் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக-வின் வேட்பாளர் பட்டியல் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ad

ad