திங்கள், மார்ச் 04, 2019

விஜயகாந்த் இல்லத்துக்கு வந்த ஒ.பன்னீர் செல்வம் : அவசர சந்திப்பு ஏன் ?


தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வந்துள்ளார்.

நாளை கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை எடுக்கப்படுவதாக தேமுதிக நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை தற்போது ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று சந்தித்து வந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள், மோடி கலந்துகொள்ளவிருக்கிற மெகா கூட்டணியின் அறிமுக நிகழ்ச்சிக்குள்ளாக தேமுதிகவை முக்கிய முடிவு எடுத்து நாளை இறுதி முடிவை அறிவிக்குமாறு கூறவே விஜயகாந்த் இல்லத்துக்கு தற்போது பன்னீர் செல்வம் மற்றும் ஜெயக்குமார் முதன்முதலாக வந்துசென்றதாக தகவல் வெளியாகிறது.

இந்த சந்திப்பின் போது சுதீஸ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது