புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2019

மன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு



திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டதைகக் கண்டித்து இன்று மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் தர்ம குமார குருக்கள் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மக்கள் ஒன்றுகூடினர்.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்குச்  சென்று வீதியின் இரு கரையிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளைத் தாக்கியவாறும் நந்திக் கொடியினை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர், இந்து மத குருக்கள் , இந்து மக்கள் என  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாசிடம் தமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது. மனுவை மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் செயலாளர் கையளித்துள்ளார்.

ad

ad