செவ்வாய், மார்ச் 12, 2019

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி?
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று யாழ். பல்கலைக்கழகத்தில்இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இனப்படுகொலையினை நினைவுகூரும் பதாகைகளினை தாங்கியவாறு புறப்பட்டுள்ள குறித்த ஊர்தி பல்கலைக்கழக மாணவர்கள் சகிதம் அனைத்து கிராமங்களிற்கும் மக்கள் ஆதரவு கோரி பயணிக்கவுள்ளது.
ஏதிர்வரும் 16ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள  மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் தமது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.