திங்கள், மார்ச் 04, 2019

ஜெனீவா அமர்வில் யுத்த ‘சூனிய வலயம்’


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைப் போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்தும் யுத்த ‘சூனிய வலயம்’ (NO FIRE ZONE: SRI LANKA AND THE SEARCH FOR JUSTICE TEN YEARS ON) ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது.


பிரபல பிரித்தானிய இய குனர் கெலும் மைக்ரே தயாரித்த இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்ட பின்னர்,அது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் நீதியையும் சட்ட ஆட்சியையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைவவாதிகளும், நிபுணர்களும் இதில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகம், லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல அமைப்புகளின் அநுசரணையுடன் நாளை இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.