வெள்ளி, மார்ச் 15, 2019

பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நீதிபதியின் அதிரடி அறிவிப்பு!


சிறிலங்கா ராணுவஅதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை லண்டன் வெஸ்ற்மினிஸ்டர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக முன்றலில் தமிழ்மக்கள் அறவழியில் போராடியபோது அவர்களை நோக்கி “கழுத்தை அறுக்கும்” சைகையை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக இந்த வழக்கு நடத்தப்பட்டது.

இந்தவழக்கில் கடந்த பெப்ரவரியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

எனினும் மீண்டும் இன்று இந்தவழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவரை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பை நீதிபதி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.