புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2019

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?


தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், ஜொஹன்னஸ்பேர்க்கில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நம்பிக்கையுடன் இலங்கை காணப்படுகின்றபோதும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை வெல்வதற்கு மிகச் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.

அதுவும் டெஸ்ட் தொடரை இழந்தமைக்கு பழிவாங்க தென்னாபிரிக்கா காத்திருக்கும் என்பதோடு, இன்னும் மூன்று மாதத்தில் உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ள நிலையில், உலகக் கிண்ணம் குழாமில் இடம்பெறுவதற்கு, றஸி வான் டர் டுஸன், டுவைன் பிறிட்டோறியஸ், வியான் முல்டர், றீஸா ஹென்ட்றிக்ஸ் ஆகியோர் சிறப்பான பெறுபேற்றை வழங்க எதிர்பார்ப்பார்கள் என்ற நிலையில், இலங்கைக்கு இத்தொடர் கடினமானதாகவே அமையவுள்ளது.

அந்தவகையில், மீள்வருகையொன்றைப் புரிந்துள்ள சிரேஷ்ட வீரர் உபுல் தரங்கவாவோடு, குஷல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டாலே தொடரை வெல்வது குறித்து இலங்கை சிந்திக்க முடியும்.

இதுதவிர, அணித்தலைவர் லசித் மலிங்கவை விட ஏனைய பந்துவீச்சாளர்கள் அனுபவம் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றபோதும், டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித ஆகியோரின் மீது நம்பிக்கை காணப்படுவதோடு, தனது பந்துவீச்சுப்பாணியை திருத்தி தடையிலிருந்து மீண்டு வந்துள்ள சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய மீதும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மறுபக்கமாக, இத்தொடருக்கான குழாமில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா இல்லாதபோதும், அணித்தலைவர் பப் டு பிளெஸி, டேவிட் மில்லர், குயின்டன் டி கொக் என பலமானதாகவே துடுப்பாட்டவரிசை காணப்படுகின்றது. பந்துவீச்சுப் பக்கமும் சகலதுறை வீரர்கள் பட்டாளத்துக்கு மேலாக, காயத்திலிருந்து மீண்டு வந்த லுங்கி என்கிடி, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹீர் என பலமானதாகவே காணப்படுகிறது. வேகமாக பந்துவீசும் புதுமக வீரர் அன்றிச் நொர்ட்ஜே எவ்வாறு செயற்படுவார் என எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது

ad

ad