புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2019

இரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..


ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றம் பிரெக்சிட் திட்டத்திற்கான நடவடிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.தெரசா மே-யின் தீர்மானத்திற்கு ஆதரவாக 202 பேரும் எதிராக 391 பேரும் வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக 149 வாக்குகள் வித்தியாசத்தில் தெரசா மேயின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிட் நடவடிக்கையின் காலக்கெடு இம்மாதம் 29ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பிரெக்சிட் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள இங்கிலாந்து எம்பிக்கள் ஐரோப்பிய யூனியனுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மே அரசை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad