புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2019

இந்தியாவின் உதவியைக் கோரியது சிறிலங்கா – சென்னையில் 100 கொமாண்டோக்கள் தயார்

உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை சிறிலங்கா கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை அனுப்புவது தொடர்பில் சிறிலங்காவிடம் இருந்து முறைப்படியான கோரிக்கை இந்தியாவுக்கு வரவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தியா தனது நாட்டுக்கு வெளியே தமது படையினரை அனுப்புவதை கொள்கையளவில் விரும்பவில்லை என்றும், அதனால் முறைப்படியான கோரிக்கைக்காக காத்திருப்பதாகவும், அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சிறிலங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை அடுத்து, தீவிரவாத முறியடிப்புக்கான தேசிய காவல்படை கொமாண்டோக்களின் அணி ஒன்று சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்தியாவின் உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ குண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய விசாரணைகளில் தேசிய காவல் படைக்கு உள்ள நிபுணத்துவத்தை கருத்தில் கொண்டு, அவர்களை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுள்ளோம்.

புதுடெல்லியில் உள்ள மூத்த அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள். தேசிய காவல்படையைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோரைக் கொண்ட தீவிரவாத முறியடிப்பு மற்றும் பணய முறியடிப்பு அணிகள் அங்கு நிலை கொண்டுள்ளன.

சிறிலங்காவில் அவர்களை நிறுத்தி உதவுவது தொடர்பாக, இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளும் தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குண்டுவெடிப்புகளை அடுத்த விசாரணைகளுக்காக, இந்தியாவின் றோ மற்றும் ஐபி ஆகியவற்றைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று ஏற்கனவே சிறிலங்காவில் தங்கியுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ad

ad