புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம்

சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக் குழு அந்தத் தாக்குதல்களைநடத்தியவர்கள் என்று ஏழு பேரினது பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி சிறிலங்கா தலைநகர் கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ளநட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள்நடத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ்அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்குஉரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு, அந்தத் தாக்குதல்களை நடத்தியவர்களின் பெயர் பட்டியலையும்வெளியிட்டிருக்கின்றது.

தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம்அமைப்பே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும்,சிறிலங்கா படைத் தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ஐ.எஸ்உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்திருக்கின்றனர்.

சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களைஇஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி உலக நாடுகள் பலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல்களைநடத்திவரும் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு தொடர்பான நிபுணத்துவ புலனாய்வுஊடகவியலாளரான நிவ்யோர்க் டைமஸ் பத்திரிகையின் ருக்மினி கலிமார்ச்சி, தனதுடுவிட்டர் பதிவுகளில் ஐ.எஸ் ஆயுததாரிகளின் அறிவிப்புக்களைஅம்பலப்படுத்தியிருக்கின்றார்.

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரபுமொழியில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளின்இயக்க பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

அபு ஒபைடா, அபு அல் முக்தார், அபு காலீல், அபு ஹம்ஷா, அபு அல்பரா, அபு முகம்மட்மற்றும் அபு அப்துல்லாஹ் ஆகியோரே இந்தத் தாக்குதல்களைநடத்தியதாகவும் ஐ.எஸ் தெரிவித்திருக்கின்றது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அபுஹம்ஷா குண்டை வெடிக்க வைத்துக்கொண்டதுடன், நீர்கொழும்புபுனித செபஸ்தியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபு காலீல் வெடிக்கவைத்துக்கொண்டதாகவும் ஐ.எஸ் கூறியுள்ளது.



மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீதான தாக்குதலை அபுமுகம்மட் மேற்கொண்டுள்ளார். எஞ்சியவர்கள் கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் மீதானதாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதல்தாரிகள் தாக்குதல்களுக்கு முன்னதாக ஐ.எஸ் கொடிக்கு முன்னால் எடுத்துக்கொண்ட நிழல் படங்களையும் ஐ.எஸ் ஆயுததாரிகளின்ஊடகமான ஹமாக் ஊடகம் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலிதீர்க்கும் வகையிலேயே இஸ்லாமிய கடும்போக்கு ஆயுதக்குழுவினர் சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சில் இஸ்லாமியர்களை இலக்குவைத்து பள்ளிவாசல்கள் மீது கடந்த மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் –சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய தினம் அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுடன் தொடர்புடைய உள்ளூர் அமைப்புடன் ஐ.எஸ்அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் என தெரிவித்தார்.


அதேவேளை தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் வெளிநாடுகளில் விசேட பயிற்சிகளைப் பெற்று திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் சமூகத்தினர் கடும் ஆத்திரத்தில்இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ad

ad