சனி, ஏப்ரல் 27, 2019

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை
அடுத்து நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டின் பல இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைள்  சோதனைகள்  இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை பெரியபரந்தன், இயக்கச்சி, கிளிநொச்சி நகர் போன்று இடங்களில்  இராணுவத்தினரின் கடும் சோதனை நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரியபரந்தன், இயக்கச்சி உள்ளிட்ட பல பகுதிகள்சுற்றி வளைக்கப்பட்டு வாகனங்கள், பயணிகள், வீடுகள், வியாபார நிலையங்கள் என சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின்  சுற்றுக்காவல்  நடவடிக்கைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.