புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2019

கம்பளையில் பாதணி விற்கும் வர்த்த நிலையத்திற்குள் மறைந்திருத்த தேடப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என வெளியிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்பவர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டிய பகுதியில் வைத்து மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிற்றூர்திடன் சாரதியை வீதியில் சோதனையின் போது இச்சிற்றூர்தி யாருடையது என விசாரித்தபோது குறித்த வாகனம் தேடப்பட்ட சந்தேக நபர்களினது எனத் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சாரதி வழங்கிய தகவலையடுத்து தேடப்பட்ட இரு சந்தேக நபர்களும் கம்பளையில் பாதணி விற்கும் வர்த்த நிலையத்திற்குள் மறைந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் குறித்த கடையின் பூட்டினை உடைத்து சோதனையிட்டபோது இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சிற்றூர்தி சாரதி உட்பட மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad