புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2019

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: மீண்டும் வீடுவீடாக வரவுள்ள இராணுவத்தினர்!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்களை தொடர்ந்து அனைத்து வீடுகளும் பரிசோதனைக்குட்
படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவின் ஊடாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, வீடுகளின் நிரந்தர
$குடியிருப்பாளர்களின் பட்டியலொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை தீவிரப்பப்டுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த யுத்த காலங்களில் வடகிழக்கு தமிழ் மக்களிடையே இவ்வாறான நிரந்தர குடியிருப்பாளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வீடுவீடாக இராணுவத்தினரின் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்

ad

ad