திங்கள், ஏப்ரல் 29, 2019

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில் தேடப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்தது.

மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் கடந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் ஏனைய மூவரும் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்