புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2019

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு கோத்தபாய சம்பளம் வழங்கியமை அம்பலம்


சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திவரும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான தவ்கித் ஜமாத் அமைப்பின் செயலாளரான அப்துல் ராசிக் என்பவருக்கும் அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் 26 பேருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சம்பளம் வழங்கிவந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது.

இவர்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறையுடன் இணைந்து பணியாற்றினர் எனக் காரணம் காட்டியே அவர்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும்போது வேதனம் வழங்கப்பட்டது என ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களின் இணைப்பாளராக படை அதிகாரி ஒருவரும் பணியாற்றினார் எனவும் அந்த அதிகாரி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு தீவிர ஆதரவாக பிரச்சாரங்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டார் எனவும் ராஜித கூறினார்.

முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அப்போது சந்தித்துக் கலந்துரையாடினார் எனவும் அப்போது உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரும் இருந்தனர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

விரைவில், இது தொடர்பான ஆதாரங்களைத் தாங்கள் அம்பலப்படுத்துவார்கள் எனவும் அதன் பின்னர் யார் தேசபக்தர்கள் என்பது தெரியவரும் எனவும் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தீவிர பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகவே இவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறான சந்தேகங்களின் பின்னணியிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்தத் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

ad

ad