புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2019

30 குழந்தைகள் விற்பனை: அதிர்ச்சியில் நாமக்கல்

நாமக்கல், ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் நடத்திய விசாரணையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்த பொலிஸார், சேலம் மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தனியார் வைத்தியசாலையின் செவிலியர் பர்வீன், இடைத்தரகர்கள் அருள்சாமி, ஹசீனா, எம்பியூலன்ஸ் சாரதி முருகேசன் ஆகியோரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களின் சாட்சியங்களை காணொளியில் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சேலம்- எஸ்.சர்க்கார் பட்டியை சேர்ந்த செவிலியர், உதவியாளர் சாந்தியை சி.பி.சி.ஐ.டி பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரான சாந்தி, “24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோர்கள், இடைத்தரகர்கள் ஊடாக வாங்கி வளர்த்து வரும் பெற்றோர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad