வியாழன், மே 02, 2019

தற்கொலைத் தாக்குதலில் 4 சீன விஞ்ஞானிகள் பலி!

சிறீலங்காவில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் நான்கு சீன விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளர்.

இத்தகவலை கொழும்பில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்

இதன்போதே, அவர்கள் தற்கொலை குண்டுவெடிப்பில் சிக்கிப் பலியாகியுள்ளனர்.