புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2019

முன்னாள் போராளியை விடுவிக்க இணக்கம்!

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், காவல் துறைய கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் காவல் துறை மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி வாக்குறுதி உறுதியளித்துள்ளதாக மனோககேணசன் தனது முகப் புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad