புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2019

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!

விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றார்கள்
ஐஎஸ் இனை யாரும் ஏற்கவில்லை

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்

ad

ad