புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2019

ரான்சில் குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட 'பார்சல் வெடிகுண்டு' தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு பிரான்ஸின் லியோனின் பகுதியில் பாதசாரிகள் நடமாட்டம் இருந்த தெரு ஒன்றில் பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 8 வயது சிறுமி உட்பட, குறைந்தபட்சம் 13 பாதசாரிகள் லேசாயன காயங்களுடன் தப்பியிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சோனோ மற்றும் ரோன் ஆற்றுப்பகுதிக்கு நடுவே உள்ள குறுகிய நிலப்பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த பொதிகை, இரண்டு பிரபல தெருக்களின் மூலையில் ஒரு பேக்கரி முன் வைக்கப்பட்டிருந்ததாக காவல் துறை ஆதாரம் தெரிவிக்கிறது.

தாக்குதல் நடப்பதற்கு 2 நிமிடங்களுக்கு முன் தான் மர்ம நபர் ஒருவர் சைக்கிளில் வந்து, பார்சலை விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முகத்தில் கருப்பு நிறத்திலான கண்ணாடியுடன் வந்த நபரை சிசிடிவி ஆதாரத்தை வைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலுடன் சம்மந்தப்பட்டிருக்கலாமா என்கிற கோணத்தில், பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைக்காட்சியின் வாயிலாக இதனை உறுதி செய்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், லியோனில் ஒரு குண்டுவீச்சு நடந்தது. அதில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்

ad

ad