புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2019

மாணவர்கள் மீதான பயங்கரவாத சட்டமே நீக்கம்

சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்ததையடுத்தே மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கைதான மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாணவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் அணைத்து இந்த வழக்கு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சமர்ப்பணம் செய்தனர். மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 சட்ட ஏற்பாடுகளில் ஒன்றை நீக்கி மீதான 3 ஏற்பாடுகளின் கீழ் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணை வழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதனை மாணவர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளும் உறுதி செய்தனர்.

மாணவர்கள் இருவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உப விதிகளின் கீழான ஏற்பாடு மற்றும் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயம் ஆகிய நான்கு ஏற்பாடுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இதில் மேன்முறையீட்டு நீதிமன்றால் மட்டும் பிணை வழங்க்க் கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை மீளப்பெறுமாறு கோப்பாய் பொலிஸாருக்கு சட்ட மா அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் மாணவர்கள் இருவருக்கும் எதிராக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது பிணை வழங்குவதற்கு சட்ட மா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

ad

ad