புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2019

இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்

வவுனதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசிற்குள் செயற்பட்டுவரும் முஸ்லீம் புலனாய்வாளர்கள் திட்டமிட்டு செயற்பட்டார்களாக என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளன.

வவுனதீவில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனையடுத்து எதுவித விசாரணைகளுமின்றி சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியான அஜந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார்.

இக் கைதுச் சம்பவத்தின் பின்னணியில் முஸ்லீம் புலனாய்வாளர்களே இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி ஈஸ்ரர் தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் சேதனைகளின் போது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடு ஒன்றினை முற்றுகையிட்டபோது அவர்கள் குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

அதன் பின்னராக அங்கு மீட்கப்பட்ட துப்பாக்கி வவுனதீவில் கொல்லப்பட்ட பொலிசாரினுடையவை என உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வவுனதீவுப் பொலிசாரைக் கொன்றது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவங்களே முஸ்லீம் புலனாய்வாளர்கள் மீதான சந்தேகப் பார்வைகளை வலுவாக்கியுள்ளது. தமது இனத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக அப்பாவி தமிழ் இளைஞனை மாட்டிவிட்டார்களா என்ற சந்தேகம் வலுவாகியுள்ள அதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு முஸ்லிம் புலனாய்வாளர்கள் ரகசியமான முறையில் உதவிவந்தார்களா என்ற சந்தேகங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

ad

ad