புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2019

சுடுவதற்கு ரணில் அனுமதி

குழப்பங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் அமதித்துள்ளரர்.இதன்பிரகாரம் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை  மையத்தில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உயர்மட்ட இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேசினர்.

சில அரசியல்வாதிகள் மீண்டும் 1983 ஜூலைக் கலவரம் போன்ற நிலையை உருவாக்க எத்தனிக்கின்றனர் என்று இராணுவ உயர் அதிகாரிகள் இந்தச் சந்திப்பின் போது, தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர், நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இராணுவத்தினர் அவசரகால விதிகளின் படி உள்ள அதிகாரங்களை அதிகபட்சமாக பயன்படுத்துமாறு கூறினார்.

ad

ad