புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர்

வடக்கு – கிழக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பனை அபிவிருத்தி நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடும் அதிருப்தி கொண்டுள்ளார் என்று அறிய முடிகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரத்துக்கு உள்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் தடுத்து மொத்த நிதி ஒதுக்கீடுகளும் அபிவிருத்திப் பணிகளும் மத்திய அரசால் முன்னெடுக்கப்படுவதற்கே இந்த நிதியம் வழியமைக்கின்றது என ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு தலையீடு செய்வதாக அவர் தமக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு – கிழக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு போட்டியாக இந்த நிதியம் பிரதமரால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்களை உள்ளடக்கி ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. எனினும் பனை அபிவிருத்தி நிதியத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சின் அதிகாரிகளால் மட்டுமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அதனால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகள் மாவட்டச் செயலாளர்களால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டால் அவற்றால் இந்த நிதியத்தின் ஊடான அபிவிருத்திப் பணிகளில் பங்குதாரர்களாகச் செயற்பட முடியாது என்பதும் ஆளுநரின் கருத்தாக உள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தனது அதிருப்தியை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவிப்பார் என்றும் அறியமுடிகிறது.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை அபிவிருத்தி நிதியம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

“வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைவாக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்திக்காக தேவையான நிதியை இந்த நிதியத்தினூடாக வழங்குவதற்கு ஆற்றல் உள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ad

ad