புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2019

வடக்குஆளுநர் தெற்கு தேவாலயங்களிற்கு பயணம்?

கட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (05) முற்பகல் விஜயம் மேற்கொண்டார்.
ஆலயத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் ஆலயத்தின் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய ஸ்ரீலால் பொன்சேகா அவர்களை சந்தித்து அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார். இதன்போது பயங்கரவாத தாக்குதலினால் சேதமடைந்து மீள் சீரமைக்கப்படுவரும் ஆலயத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் பாதிப்படைந்த அப்பிரதேசத்தின் சில இல்லங்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்களின் சுக துக்கங்களை கேட்டறிந்து கொண்டார்

ad

ad