ஞாயிறு, மே 19, 2019

மதூஷின் மற்றொரு சகா கம்பளையில் கைது!

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சகா கம்பளையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொலைகள், கொள்ளை, நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றசாட்டுகளுடன் தொடர்புடையவரென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கடந்த 14ஆம் திகதி பெல்மடுல்ல பிரதேச வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, மதூஷை பிணையில் எடுக்க 5 மில்லியன் ரூபாய் பணம் தேவையெனக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் காவல் துறைக்கு செய்த முறைபாட்டையடுத்தே, யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பட்டதாரியான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபர் பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்