புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2019

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 11 பேர் பலி, 6 பேர் காயம்


அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11
பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியிலுள்ள மாநாகரசபைக்கு சொந்தமான  அரச கட்டத்திலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஆயுததாரி பொலிஸாரினால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad