புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2019

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி அடுத்த வாரம் ஆரம்பம்!- 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார்.

இரண்டு அல்லது மூன்று மாத காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் இந்த விமான நிலையம் சிவில் விமான நிலையமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 15 விமான நிலையங்கள் உண்டு. இவற்றில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடுகளில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. இது ஆசிய நாடுகள் மத்தியில் ஆறாவது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad