ஞாயிறு, ஜூன் 30, 2019

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட திட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பேரணியாகச் சென்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும் தனது பொறுப்புகளிலிருந்து ஜனாதிபதி விலகியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் ஜனாதிபதிக்கு எதிராக இந்த கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்