புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2019

ஜெயலலிதாவை விட திறமையாக செயல்படுகிறதா ஓபிஎஸ் ஏபிஎஸ் கூடடணி தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தியது அதிமுக தங்க தமிழ்ச்செல்வன்ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார்

தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உயர்த்திய போர்க்கொடியைத் தொடர்ந்து, அடுத்த அதிரடிகளை அந்த கட்சிக்குள் ஏற்படுத்த, ஆளும் கட்சி தீவரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம் வரை தினகரன் தரப்புடன் தொடர்பிலிருந்த தங்க தமிழ்ச்செல்வன், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார். அதே நேரம், மறுபுறம் அ.தி.மு.க தரப்பு அவருடன் பேச்சுவார்த்தையை வேகப்படுத்தியது. ஒருகட்டத்தில் தினகரன் தரப்பு, தங்கம் இனி நம்மிடம் வரமாட்டார் என்று தெரிந்த பிறகே, அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டனர். தினகரன் அணியில் இரண்டாண்டுகளாக முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய தங்க தமிழ்ச்செல்வனை அங்கிருந்து அப்புறப்படுத்தியதன் பின்னால், ஆளும்கட்சிக்கு உளவுத்துறையும் கைகொடுத்துள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன்



இப்போது, தங்க தமிழ்ச்செல்வன் விக்கெட் விழுந்துவிட்டதால், அடுத்தடுத்த முக்கியப் புள்ளிகளையும் அ.ம.மு.க முகாமிலிருந்து அகற்றும் வேலையை ஆளும்கட்சிக்கு விசுவாசமாகச் செயல்படும் உளவுத்துறை அதிகாரிகள் சிலர் செய்து வருகிறார்கள்.குறிப்பாக, தினகரன் பின்னால் அணி திரண்டு பதவி இழந்த பதினெட்டு எம்.எல்.ஏ-க்களில் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவர் வீழ்ந்துவிட்டார்கள். அடுத்த 16 பேருக்கும் இப்போது குறிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு, தினகரன் அணியில் உள்ள வடமாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு காவல்துறை அதிகாரியிடமிருந்து போன் வந்துள்ளது. “இனியும் அங்கிருந்து என்ன செய்யப்போகிறீர்கள். ஆளும்கட்சி உங்களுக்கு அனைத்தும் செய்துதருவார்கள். எதற்காக அங்கிருந்து கஷ்டப்பட வேண்டும்.

தினகரன்

ஒரு நண்பராக உங்களுக்கு இதைச் சொல்கிறேன்” என்று தூண்டில் போட்டுள்ளார். அதேபோல், பதவி இழந்த மற்றொரு எம்.எல்.ஏ-வின் மைத்துனருக்கு உளவுத்துறை அதிகாரியே நேரடியாகப் பேசி, “மச்சானிடம் பேசுங்கள். காலம் இருக்கும்போதே எதையும் செய்துகொள்ள வேண்டும். அவர் எதிர்பார்ப்பதை மட்டும் கேட்டுசொல்லுங்கள்” என்று தூண்டில் போட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்டவரிடம் பேசுவதைவிட, அவர்களுக்கு நெருக்கமான உறவுகளிடம் ஆசை வார்த்தை காட்டினால், அது குடும்பத்திற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று கணக்கு போட்டு, தினகரன் அணியை ஆட்டம் காணவைக்க தயாராகிவிட்டது உளவுத்துறை.

தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் அணியிலிருந்து கழன்று செல்ல முக்கியக் காரணம் அவருடைய மனைவி என்பதால், அதே பாலிஸியை இப்போது மேலும் சிலரிடம் செயல்படுத்தத் திட்டமிடுகிறார்கள். ஆளும் தரப்பிலிருந்து போன் வந்த ஒவ்வொரு நிர்வாகியும் மற்ற நிர்வாகிகளிடம் 'உங்களுக்கு போன் வந்ததா?' என்று விசாரித்துவருகிறார்கள். தினகரனோ, “ஆளுங்கட்சியினர் அழைத்தால் செல்பவர்கள் செல்லட்டும். நம்முடன் கடைசிவரை யார் இருக்க விரும்புகிறார்களோ அவர்கள் மட்டும் இருக்கட்டும்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டாராம்

ad

ad