புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2019

தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

ஜூன் 21ஆம் திகதியிலிருந்து ஜூலை முதலாம் வரை அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச போதை ஒழிப்பு வாரத்துக்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

எனவே இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணத் தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை ​போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதென, சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் தெரிவித்துள்ளார்.

ad

ad