புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2019

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்-அண்ணாமலைஅ.தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க முக்கியப் புள்ளி

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்அண்ணாமலை
நெல்லை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர்
பாப்புலர் முத்தையா, தினகரனிடமிருந்து விலகியதற்கு சில முக்கிய காரணங்களை நம்மிடம் தெரிவித்தார். மாவட்டச் செயலாளருக்கு தகவல் தெரிவிக்காமல் நெல்லைக்குள் பொதுச் செயலாளர் தினகரன் வந்ததாகவும், மரியாதை என்பதே கட்சியில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மரியாதை இல்லாததால் விலகிய பாப்புலர் முத்தையா


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க-வில் தொடர்ந்து இணைந்துவருகின்றனர். நெல்லை மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன். தேர்தலில் தோல்வியடைந்த கையோடு அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இவருடன் அ.ம.மு.க-வின் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தனர். இவர்கள் இணைவதற்கு சில நாள்களுக்கு முன் அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த அண்ணாமலை அ.தி.மு.க-வில் இணைந்தார். நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரில் பலர் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். இதனால் அதிருப்தியிலிருக்கும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் சேருவது தொடர்கதையாகிவருகிறது. இதே நிலை நீடித்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூடாரம் நெல்லையில் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.



அ.தி.மு.க-வில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம் பேசினோம். ``அ.தி.மு.க.வுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சசிகலாவின் ஒப்புதலோடு டி.டி.வி. தினகரன் ஏற்படுத்தினார். துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், திடீரென பொதுச் செயலாளரானார். அவரை நம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டோம். எங்களின் பணத்தை கட்சிக்காக செலவழித்தோம். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தைப் பெற்றுள்ளோம்.

மரியாதை இல்லாததால் விலகிய பாப்புலர் முத்தையா

நெல்லை மக்களவைத் தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஞானஅருள்மணி மாற்றப்பட்டு அம்மா பேரவை இணைச் செயலாளர் மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மைக்கேல் ராயப்பனுக்கு 62,209 ஓட்டுகள் கிடைத்தன. தமிழகத்தில் 11 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மண்டல பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் அ.ம.மு.க-வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்தான் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க-வில் நாங்கள் சேர்ந்துள்ளோம். சமீபத்தில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தினகரன், `இந்தக் கட்சியிலிருந்து யார் சென்றாலும் எனக்குக் கவலையில்லை' என்ற ரீதியில் பேசினார். இப்படிப்பட்ட சூழலில் அந்தக் கட்சியில் இனியும் இருந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது. கட்சியின் தலைமையில் உள்ள சிலரால் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளோம்'' என்றனர்.

பாப்புலர் முத்தையாவிடம் பேசினோம். ``எதை வேண்டும் என்றாலும் இழக்கலாம். மரியாதையை இழக்க முடியுமா. அதனால்தான் அ.ம.மு.க-விலிருந்து விலகி தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்துள்ளேன். மண்டலப் பொறுப்பாளர்கள் சொல்லும் தவறான தகவல்களைக் கேட்கும் தினகரன், அதை நம்பி மாவட்டச் செயலாளர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார். தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு தினகரன் வந்திருந்தார். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னிடம் தொகுதி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், மண்டல பொறுப்பாளர்களிடம் மணிக்கணிக்கில் பேசினார். தினகரனைச் சந்திக்கக்கூட மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ad

ad