திங்கள், ஜூன் 03, 2019

அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த இந்து மதகுருவுக்கு ஏற்பட்ட நிலை

அத்துரலிய ரத்ன தேரருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்த இந்து மதகுரு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண பிரதான இந்து மதகுரு நில்லம்ப ஹரிதேவ் என்ற மதகுருவே இவ்வாறு வைத்தியசாலையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலகக் கோரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இன்று அதை முடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது