திங்கள், ஜூன் 03, 2019

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு

ரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்ச
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

உதவியாளர்கள் எவருமின்றி ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும் தனித்தனியாக இந்தப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.

தற்போதைய அரசியல் விவகாரங்கள், குறித்தே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

றிசாத் பதியுதீனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.