செவ்வாய், ஜூன் 04, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் முழுமையாக பதவி விலகியது வரவேற்கத்தக்கது - சம்மந்தன்

முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவிவிலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கவிடயமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எனினும் இவ்விடயத்தை எவரேனும் இன ரீதியாகக் கையாளமுற்படுவார்களாயின் அதனைத் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாங்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்