புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2019

பெண்களின் கழிப்பறையில் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி கைது!

காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் பெண்களின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிப்பறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலைய பெண் ஊழியர் ஒருவர் கழிப்பறையில் இருந்த வேளையில் இதனை அவதானித்து கூச்சலிட்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஏனைய ஊழியர்கள் இணைந்து சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 32 வயதான சந்தேக நபர் பொத்தல பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கடற்படை முகாமில் பணியாற்றுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். காலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad