திங்கள், ஜூலை 29, 2019

பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானம்-யாழ்.பல்கலைகழகம்

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும்.அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும்.அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.

அந்த வகையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சிற்றுண்டிச் சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை,தாமரையிலை ஆக்கியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’என தெரிவிக்கப்பட்டுள்ளது.