புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2019

பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய பிரிட்டன் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி, பிரெக்சிட் வேலைத்திட்டம் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பண்புகளை தான் மிக உன்னிப்பாக பரிசீலித்ததாகவும் பொரிஸ் ஜோன்சன் பிரிட்டன் பிரதமராக தெரிவானமை பிரிட்டனுக்குக்கும் பொதுநலவாய நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளில் முக்கிய மைல்கல்லாக அமையுமென தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடு களுடனான உறவை மேம்படுத்துவதற்கான பொரிஸ் ஜோன்சனின் அர்ப்பணிப்பு, ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுவடையச் செய்யுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ad

ad