ஞாயிறு, ஜூலை 21, 2019

சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில்,.
இளைஞனின் உறவினர் ஒருவர் அடையாளம் காண்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில், இளைஞனின் உறவினர் ஒருவர் அடையாளம் காண்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.

தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றிருந்தனர் என இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்ட நிலையில், ஒரே பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.