புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2019

இ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி புதிய கூட்டணியொன்றை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைத்திருந்தார். இதில், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட பல அமைப்புகள் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் கையொழுத்திட்டிருந்தன.

கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் தமது கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என்று இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு விடுத்திருந்தார். இவரின் அழைப்புத் தொடர்பில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலகராஜிடம் “தினகரன்” வினவிய போது,


நாங்களும் கூட்டணி அமைக்கின்றோம் என்ற பேரில் அமைத்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் கிடையாது. தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒரு பலமான கூட்டணியாக பயணிக்கிறது என்றார்

ad

ad