புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2019

பனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டார்

இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.

அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுங்கள். தாயகத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதி பத்து வருடங்களைக்கடந்துள்ள நிலையில். எமது சமூகம் தமது அரசியல் பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அன்றி பொருளாதார காரணங்களுக்காகவோ பாதுகாப்பற்ற சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை தொடர்வதை நாம் விமர்சிக்க முடியாது. ஆனாலும் உயிரை பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்வோம்

ad

ad