வியாழன், ஜூலை 04, 2019

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்களா புலிகள்? ஆதாரத்தை கோரும் முன்னாள் முதல்வர்

விடுதலைப் புலிகளின் பிரதான வருமானம் போதைப்பொருள் விற்பனைதான் என்ற ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் பொய்யானது. அவர்களின் காலத்தில் இவ்வாறு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக ஏதேனும் வழக்குகள் இருப்பின் அவற்றை ஆதாரமாகக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரமின்றி வெறுமனே கருத்து தெரிவிக்கக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்குமாறு ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு (புதன்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என ஜனாதிபதி நேற்று முன்தினம் கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்