புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2019

தமிழர்கள் கோத்தாவை ஆதரித்தால் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கேள்வியெழுப்பியுள்ளார்
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்
இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவுடன் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போரை நடத்திய இராணுவத் தளபதி பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முடியுமாக இருந்தால், ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எந்த தலைமைகளின் தீர்மானத்திற்கும் அமைய அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமல், தனித்து யதார்த்த நிலையினை உணர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad