புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2019

கொன்றொழித்தவர்கள் ஆட்சிக்கு வர இடமளிப்பதா?

தமிழ் மக்­களை அடி­மைப்­ப­டுத்தி – துன்­பு­றுத்­திக் கொடூ­ர­மான முறை­யில் கொன்றொழித்த­வர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வர நாம் இட­ம­ளிப்­பதா? மீண்­டு­மொரு சர்­வா­தி­கார – நாச­கார – ஆட்­சிக்கு நாம் ஒத்­து­ழைப்­பதா? இத­னைக் கருத்­தில்­ கொண்­டு ­தான் தற்­போ­தைய அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாம் வாக்­க­ளித்­தோம். அத­னைத் தோற்­க­டித்­தோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
தமிழ் மக்­களை அடி­மைப்­ப­டுத்தி – துன்­பு­றுத்­திக் கொடூ­ர­மான முறை­யில் கொன்றொழித்த­வர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வர நாம் இட­ம­ளிப்­பதா? மீண்­டு­மொரு சர்­வா­தி­கார – நாச­கார – ஆட்­சிக்கு நாம் ஒத்­து­ழைப்­பதா? இத­னைக் கருத்­தில்­ கொண்­டு ­தான் தற்­போ­தைய அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாம் வாக்­க­ளித்­தோம். அத­னைத் தோற்­க­டித்­தோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

அர­சுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ன­தும் எதிர்ப்­பால் தோற்­க­டிக்­கப்­பட்­டது. கூட்­ட­மைப்­பின் இந்த முடிவுக்கான காரணத்தை விபரித்துள்ளார், அதன் தலை­வர் இரா.சம்­பந்­தன் -

'நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மூலம் ஒரு அரசு தோற்­க­டிக்­கப்­பட்­டால் இன்­னொரு அரசு ஆட்­சிக்கு வரும். அப்­ப­டி­யா­னால் தற்­போ­தைய நில­மை­யில் எந்த அரசு ஆட்­சிக்கு வரும் என்று எமக்கு நன்­றா­கத் தெரி­யும். அந்த அரசு கடந்த காலத்­தில் ஆட்சி செய்த அர­சா­கத்­தான் உள்­ளது. அந்த ஆட்­சி­யில் தமி­ழர்­க­ளுக்கு நன்­மை­கள் ஏற்­பட்­டதா? அல்­லது தீமை­கள் ஏற்­பட்­டதா? என்­பதை நாம் சிந்­தித்­துப் பார்த்­தோம்.

அந்த அர­சின் ஆட்­சி­யில் தமி­ழர்­கள் வார்த்­தை­க­ளில் சொல்ல முடி­யாத துய­ரங்­களை அனு­ப­வித்­தார்­கள். தமிழ் மக்­களை அடி­மைப்­ப­டுத்தி – துன்­பு­றுத்­திக் கொடூ­ர­மான முறை­யில் கொன்­ற­ழித்­த­வர்­கள் மீண்­டும் ஆட்­சிக்கு வர நாம் இட­ம­ளிப்­பதா? மீண்­டு­மொரு சர்­வா­தி­கார – நாச­கார ஆட்­சிக்கு நாம் ஒத்­து­ழைப்­பதா? இத­னைக் கருத்­தில்­கொண்­டு­தான் தற்­போ­தைய அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக நாம் வாக்­க­ளித்­தோம்; அத­னைத் தோற்­க­டித்­தோம்.

தற்­போது ஆட்­சி­யி­லுள்ள அரசு மீது எமக்­கும் எமது மக்­க­ளுக்­கும் நம்­பிக்­கை­யில்லை. இந்த அரசு மீது பல விமர்­ச­னங்­கள் உள்­ளன. எனி­னும், கடந்த அர­சை­விட இந்த அரசு எமது மக்­க­ளுக்கு சில நன்­மை­ய­ளிக்­கும் கரு­மங்­க­ளைச் செய்து வரு­கின்­றது.

அதே­வேளை, எமது மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் இந்த அர­சின் தலைமை உறு­தி­யாக உள்­ளது. சில விட­யங்­க­ளைத் தீர்த்­து­வைப்­ப­தாக இந்த அர­சின் தலைமை எமக்கு நேரில் உறு­தி­மொ­ழி­க­ளைத் தந்­தது.

இன்­ன­மும் ஒரு வரு­டத்­துக்­குள் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்­குள் இந்த அர­சின் ஊடாக தமி­ழர் நலன் சார்ந்த கரு­மங்­களை செய்து முடிக்க வேண்­டும். இத­னை­யும் கருத்­தில்­கொண்­டு­தான் இந்த அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை தோற்­க­டித்­தோம் என்­றார்.

ad

ad