செவ்வாய், ஜூலை 30, 2019

ஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்

அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியானது போலியான ஆவணம் உண்மையான ஆவணம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையான ஆவணத்தை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை அதற்கான தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் கேட்கும்போது அவர்களிடம் அதனை கையளிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தற்போது இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை இதன் காரணமாக முன்னைய கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றிருக்கின்றேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் ஒரேயொரு கடவுச்சீட்டிற்கு உரியவனல்ல என்பது குடிவரவு ஆணையாளருக்கு தெரியும் இதன் காரணமாக நான் புதிய இலங்கை கடவுச்சீட்டை பெற்றுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என ஆங்கில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரஜாவுரிமையை கைவிட்டவர்களிற்கு வழங்கப்படும் ஆவணம் போன்றதொரு ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறான ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

2013 மார்ச் 13 இல் அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச 2019 யூலை ஐந்தாம் திகதி அமெரிக்க பிரஜாவுரிமையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் துறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க அதிகாரியொருவரின் கையொப்பமும் தூதரக இலச்சினையும் காணப்படுகின்றது

எனினும் குறிப்பிட்ட திகதியில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அவர் யூலை ஐந்தாம் திகதி இருதய சத்திரகிசிச்சையின் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.

மேலும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் கோத்தபாய ராஜபக்ச 2003 ஜனவரி மாதத்திலேயே அமெரிக்க பிரஜையானார் என்பதை புலப்படுத்தியுள்ளதாக ஆங்கில செய்தி இணையமொன்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஆவணத்தில் கோத்தபாய ராஜபக்சவின் கடவுச்சீட்டு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களும் பிழையானவை என அந்த இணையம் தெரிவித்துள்ளது.