புதன், ஜூலை 31, 2019

இரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது

கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாமே கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த வீட்டாருடன் தனக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , தன்னை தாக்கியமையால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்களின் வீட்டுக் குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் அயல் வீட்டுக்காரர் பொலிசாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடகவியல் பொலிசார் சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிசாரால் மீட்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் நாளை சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.