திங்கள், ஜூலை 29, 2019

பொன்னாலை பகுதியில் ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை 5.15 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது காட்டுபகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரையில் கைது செய்யப்பட்டவில்லை.

குறித்த மிதிவெடிகளை செயலிழக்க செய்யப்பட உள்ளதுடன் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.