புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2019

பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தற்போது கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகின்றார் என இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரியப்படுத்தியுள்ளார்.

"கடந்த வாரம் முல்லைதீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னைச் சந்தித்தார்கள். அங்கே முகாமிட்டிருக்கும் பெளத்த தேரருக்கு எதிராக அறங்காவலர் அளித்துள்ள புகாரை பொலிஸ் விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் "ஏன், பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை" எனக் கேட்டேன்.

"இல்லை ஐயா, பிக்குவுக்கு மனநிலை சரியில்லை. இப்போது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகின்றார்" என எனக்குப் பொறுப்பதிகாரி பதில் சொன்னார்" என்றார்.

ad

ad