புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2019

மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை;சிறீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஜூலை மாதம் 29ந் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற எழு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்தாக வழக்கு பதிவு செய்த சிறீலங்கா கடற்படை மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இன்று மீனவர்களின் வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்ற நீதிபதி கனேசராஜா மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்திரவிட்டார்.

மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் நவம்பர் மாதம் 17ந் தேதி ஆஜராக வேண்டும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கபடும் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மெருஹான முகாமிற்க்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்:-கடந்த ஜூலை மாதம் 24ந் தேதி புதுக்கோட்டை இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் படகு பழுது காரணமாக தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த மீன்வர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறீலங்கா கடற்படை மீனவர்களை கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

இன்று மீனவர்களின் வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்திரவிட்டார்.மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் படகின் உரிமையாளர் வரும் அக்டோபர் மாதம் 9ந் தேதி ஆஜராக வேண்டும் தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கபடும் என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மெருஹான முகாமிற்க்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே நாளில் இலங்கை சிறைகளில் இருந்து 11 மீனவர்கள் விடுதலையான சம்பவம் மீனவ கிராமங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad