புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2019

தனிவழியில் பயணிக்க 57 எம்.பிக்கள் தயார்

எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வாரமே சஜித்-கரு- ரணில் மூவரும் விசேட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் அடுத்த வாரத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வினை காண கட்சியின் உயர்மட்டம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமை உருவாகியுள்ளது. ஒரு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் கூட இந்த பிரச்சினையில் பொது இணக்கப்பாடு எட்டப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே உள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாச அணியினர் மாத்தறையில் பாரிய மக்கள் கூட்டம் ஒன்றினை நடத்தி தமது பலத்தை மீண்டும் நிருபித்திருந்த நிலையில் அன்றைய தினமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் இராப்போசன விருந்துபசாரதிற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

எனினும் இந்த இராப்போசனை நிகழ்விற்கு அமைச்சர் சஜித் மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் மேலும் சில முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. எனினும் இந்த நிகழ்வின் போதும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கியமான சில விடயங்கள் கட்சியின் மேலிடத்தில் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அமைச்சர் சஜித் பிரேமாதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி முக்கிய தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

ad

ad